வேலுார்; வேலுாரில் நடக்கவிருந்த, 'ஆன்லைன்' தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக, கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக, உதவி அறுவை சிகிச்சை டாக்டர்களை தேர்வு செய்வதற்கான, 'ஆன்லைன்' தேர்வு, வேலுார் தொரப்பாடி அரசு பொறியியல் கல்லுாரியில், நாளை மறுதினம் நடக்க இருந்தது.சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில், கொரோனா முழு ஊரடங்கு அமலுக்கு வருவதால், தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்வு நடக்கும் தேதி, பின்னர் அறிவிக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.