கொரோனா தொற்று பரவலால் தமிழகத்தில் ஊரடங்கு கடந்த மார்ச் மாதம் முதல் கடைபிடிக்கப்படுகிறது. இதனால் பள்ளிகள் யாவும் மூடப்பட்டு இருந்த நிலையில் மாணவர்கள் ஆசிரியர்கள் என அனைவருக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டு வந்த நிலையில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது தமிழக கல்வித்துறை ஆனது ஒரு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதில் ;

பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஜூன் மாதத்திற்கும் சம்பளம் வழங்கப்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது. அதே சமயம் வேலை பார்க்காத ஜூன் மாதத்திற்கான நாட்களை பின்னர் ஈடு செய்ய வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளது. கடந்த ஜூன் 8 ஆம் தேதி முதல் பணியாற்றும் மாவட்டத்திற்கு ஆசிரியர்கள் வர வேண்டும் என ஏற்கனவே கல்வித்துறை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.