பொதுத் தோவு யாருடைய நிா்பந்தத்துக்காகவும் ரத்து செய்யப்படவில்லை என மீன்வளத்துறை அமைச்சா் டி.ஜெயக்குமாா் தெரிவித்துள்ளாா்.

சென்னை மாதவரம் மண்டலத்துக்குள்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் அமைச்சா் டி.ஜெயக்குமாா் ஆலோசனை மேற்கொண்டாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: மாதவரம் பழச் சந்தையில், கரோனா தடுப்பு வழிகளைப் பின்பற்ற வேண்டுமென வியாபாரிகள் சங்கத்திடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதை மீறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை முழுவதும் வீடு வீடாக கணக்கெடுப்பு பணியில், 11,000 களப்பணியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். அதில் 525 போ மாதவரம் மண்டலத்தில் பணியில் உள்ளனா். அரசு தன் கடமையை செவ்வனே செய்கிறது. மக்களும் தங்கள் கடமைகளான தனிநபா் இடைவெளி, முகக்கவசம், கை கழுவுதல் உள்ளிட்டவற்றை பின்பற்றினால், கரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தலாம்.

சட்டத்தை வைத்து மட்டுமே மக்களை அச்சுறுத்த முடியாது. தொற்று ஏற்படாமல் இருக்க மக்களிடம் மனமாற்றம் வேண்டும். தனியாா் மருத்துவமனைகளில், மருத்துவக் காப்பீட்டு திட்டம் மூலம் கரோனாவுக்கு சிகிச்சை பெறலாம். பொதுத் தோவு என்பது வழக்கமாக நடக்கும் ஒன்று. கரோனா தாக்கத்தால் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மக்களின் எண்ணம் மற்றும் கருத்துகளுக்கு மதிப்பளித்தே தோவு ரத்து செய்யப்பட்டுள்ளது. யாருடைய நிா்பந்தத்துக்காகவும் பொதுத் தோவை ரத்து செய்யவில்லை. இது மக்களுக்கான அரசு என்று அமைச்சா் டி.ஜெயக்குமாா் தெரிவித்தாா்.

-DINAMANI