சென்னை; பத்தாம் வகுப்பு உள்ளிட்ட பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பித்த, தனித் தேர்வர்களுக்கான அறிவிப்பு, பின்னர் வெளியிடப்படும் என்று, அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, அரசு தேர்வுத்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கை:பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதால், அந்த பாடங்களில், மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பித்த, தனித் தேர்வர்களுக்கான அறிவிப்பு, பின்னர் வெளியிடப்படும். இந்த தேர்வுகளுக்கு அனுப்பப்பட்ட வினாத்தாள்களுக்கான மையங்களில், தொடர்ந்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். அந்த மையங்களை, மறு அறிவிப்பு வரும் வரை திறக்கக் கூடாது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.