👉 கோடைக்காலம் வந்து விட்டாலே உணவுப்பழக்கத்தில் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். ஏனெனில் மற்ற காலங்களை தவிர, கோடையில் உடலில் ஏற்படும் பிரச்சனைகளை தாங்கி கொள்ளவே முடியாது.

👉 குறிப்பாக வெயில் காலத்தில் சாதாரணமாகவே உடல் வெப்பமானது விரைவில் அதிகரித்துவிடும். ஆகவே, அப்போது சாப்பிடும் உணவு பொருட்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

👉 வெயில் காலத்தில் எந்தெந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்? என்பதை பற்றி பார்க்கலாம்.

❌ கார உணவுகளை கோடைக்காலத்தில் அறவே தவிர்க்க வேண்டும். ஏனெனில் கார உணவுகளை சாப்பிட்டால், உடல் வெப்பமானது அதிகரிக்கும். அதிலும் பச்சை மிளகாய், இஞ்சி, மிளகு, பட்டை போன்ற உணவிற்கு காரத்தை தரும் மசாலாப் பொருட்களை சற்று தள்ளி வைப்பது நல்லது.

❌ அசைவ உணவுகளை கோடைக்காலத்தில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் சாலையோர கடைகளில் விற்கப்படும் 'பாஸ்ட் புட்" உணவு வகைகளையும் தவிர்ப்பது நல்லது.

❌ சர்க்கரை அதிகமுள்ள இனிப்பு பலகாரங்கள், கிரீம் மிகுந்த பண்டங்கள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

❌ வெயில் காலத்தில் கத்திரிக்காயை அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்கலாம்.

❌ அன்றாடம் சாப்பிடும் பால் பொருட்களான பால், சீஸ், தயிர் போன்றவையும் உடல் வெப்பத்தை அதிரிக்கும். எனவே, இதனை கோடையில் அளவாக சாப்பிடுவது நல்லது.

❌ ஐஸ் தண்ணீரில் உள்ள குளிர்ச்சியானது ரத்த குழாய்களை சுருக்கி, உடலின் வெப்பத்தை இன்னும் அதிகமாக்கிவிடுகிறது. ஆகவே, கோடையில் ஐஸ் தண்ணீர் குடிக்கலாம். ஆனால், அதிகளவு குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

❌ வெயில் காலத்தில் காபி, தேநீர் குடிப்பதை குறைத்து கொள்ள வேண்டும்.

❌ கோதுமை மாவினால் செய்யப்படும் சப்பாத்தி செரிமானம் ஆவதற்கு நிறைய நேரம் எடுத்துக் கொள்ளும். இதனால் உடல் வெப்பமானது அதிகரிக்கும். எனவே, பகல் நேரத்தில் சப்பாத்தி சாப்பிடுவதற்கு பதிலாக சாதத்தை எடுத்துக் கொள்வது நல்லது.

❌ எண்ணெயில் பொரித்த அல்லது வறுத்த உணவுகளை அதிகம் சாப்பிட்டாலும், உடல் வெப்பம் அதிகரிப்பதோடு, வாயுத் தொல்லையும் உண்டாகும்.