சென்னை; பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ள நிலையில், இன்ஜினியரிங் கவுன்சிலிங் குறித்து, உயர் கல்வித் துறை ஆலோசனை மேற்கொண்டுள்ளது.

மதிப்பெண் பட்டியல்மார்ச், 24ல், பிளஸ் 2 தேர்வுகள் முடிந்து, மே, 27 முதல் விடைத்தாள் திருத்தம் துவங்கியது. ஜூன் இரண்டாவது வாரத்தில், விடைத்தாள் திருத்தம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, மாணவர்களின் மதிப்பெண்கள் ஆய்வு செய்யப்பட்டு, பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

மாநில வாரியாக, அனைத்து மாணவர்களின் மதிப்பெண் பட்டியலும் தயார் செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், அடுத்த மாதம் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை, பள்ளி கல்வித் துறை செய்து வருகிறது. இதை தொடர்ந்து, உயர் கல்வி படிப்புக்கான திட்டமிடுதலை, மாணவர்களும், பெற்றோரும் துவங்கிஉள்ளனர்.இதில், இன்ஜினியரிங் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு, தமிழக உயர் கல்வித் துறை சார்பில், 'ஆன்லைன் கவுன்சிலிங்' நடத்துவது குறித்து, அண்ணா பல்கலை., தொழில்நுட்ப கல்வித் துறை மற்றும் உயர் கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசனையை துவங்கியுள்ளனர்.

மத்திய அரசின் பல்கலை., மானிய குழுவான யு.ஜி.சி., அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., ஆகியவற்றில் இருந்து வழிகாட்டு விதிகளை, உயர் கல்வித் துறையினர் எதிர்பார்த்துள்ளனர்.கல்வித் துறை முடிவுஇந்த விதிகள் வந்ததும், மத்திய அரசின் ஒப்புதலை பெற்று, கவுன்சிலிங்குக்கான விண்ணப்ப பதிவை, ஆன்லைனில் துவங்க, உயர் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.