கொரோனாவிலிருந்து பாதுகாக்க இலவச ...

சென்னை; பள்ளி கல்வித்துறைக்கு, சமூக நலத்துறை சார்பில், 47 லட்சம் முக கவசங்களை வழங்கப்பட்டு உள்ளன.

தமிழகத்தில், வரும், 15 முதல், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் நடக்கின்றன; 94 லட்சம் பேர் எழுதுகின்றனர்.இந்நிலையில், தமிழக பள்ளி கல்வித்துறையின் கீழ் இயங்கும், பொதுத்தேர்வுகள் துறை, தமிழக சமூக நலத்துறையிடம் இருந்து, 47 லட்சம் முக கவசங்களை பெற்றுள்ளது. இவை, அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள், தேர்வு அதிகாரிகள், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக, சமூக நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.