தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் முறையில் வகுப்புகளை நடத்துவது குறித்து முதல்வருடன் கலந்தாலோசனை நடத்தி இன்னும் இரண்டு நாள்களில் முடிவு அறிவிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பள்ளிக் கூடங்களை தற்போது திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. கரோனா பரவல் சூழ்நிலை மாறிய பிறகே பள்ளிக்கூடங்களை திறப்பது குறித்து முடிவெடுக்க முடியும்.

ஆன்லைன் வகுப்புகளை பொறுத்தவரை இரண்டு நாள்களுக்குள் முதல்வருடன் ஆலோசித்து முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் வகுப்புகள் பள்ளி மாணவர்களுக்கு ஏற்படையதா? அல்லது மன ரீதியாக, உடல் ரீதியாக பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து விவாதங்கள் எழுப்பப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் செங்கோட்டையன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.