ஐநா சபையின் ஓர் அங்கமான சர்வதேச தொழிலாளர் நிறுவனம் (ILO) 2003 ஆம் ஆண்டு முதல் ஜூன் 12ம் தேதி உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கிறது இதனடிப்படையில் தமிழ்நாட்டிலும் குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் அகற்றப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.

 1991 ஆம் ஆண்டின் மக்கள் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 5 முதல் 14 வயதுக்குட்பட்ட 20  கோடி குழந்தைகளில் 1.10 கோடி குழந்தைகள் உழைக்கும் சிறார்கள் என்ற அதிர்ச்சி தரும் உண்மை கண்டறியப்பட்டுள்ளது.
 2006 அக்டோபர் 10ஆம் தேதி முதல் வீடு,சாலையோர கடை, ஓட்டல்கள் போன்ற இடங்களில் சிறுவர்-சிறுமிகளை வேலைக்கு அமர்த்த மத்திய அரசு தடைவிதித்துள்ளது. இத்தடையை எல்லோருக்கும் விரிவுபடுத்தி நாடு முழுவதும் அமல்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரசு ஊழியர்கள் தங்களது வீடுகளில் சிறுவர், சிறுமிகளை வேலைக்கு அமர்த்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் குறித்து அகில உலக உடன்படிக்கைகளில் தனி மனிதருக்கும், குழுக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.
தனிமனித உரிமை- உயிர் வாழ்வதற்கான உரிமை, தனது வீட்டில் தனியாக இருக்க உரிமை, நடமாட்ட சுதந்திரத்திற்கான உரிமை, சட்டத்திற்கு முன் சமமாக நடத்தப்படுவதற்கான உரிமை.

குழந்தைகள் உரிமை கல்வி பெறுவதற்கான உரிமை, விளையாட்டு பொழுது போக்கிற்கான வாய்ப்புப்   பெரும் உரிமை.

நமது உரிமை என்பது அடுத்தவர்  உரிமையை பாதிக்கக் கூடாது என்பதுதான் உரிமைகளின் சாராம்சம்.

"கல்லாமை இல்லாமை ஆக்குவோம்!"