பத்தாம் வகுப்பு தேர்வுக்கு பொறுப்பாளரான தேர்வுத்துறை இயக்குனருக்கும், தேர்வு துறை கண்காணிப்பாளருக்கும் கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளதால் தேர்வு நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் 15ஆம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெற தமிழக அரசு அனைத்து பணிகளையும் செய்து வருகிறது. இன்று முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து தேர்வுக்கான பணிகளில் ஈடுபடுவார்கள் என்றும் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் மாணவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது
மேலும் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாஸ்க் வழங்குதல் உட்பட பல்வேறு ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது. மேலும் தேர்வு நாளின்போது பேருந்துகள் சிறப்பு பேருந்துகள் வசதியும், பேருந்துகள் இல்லாத இடத்தில் வேன்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வுக்கு பொறுப்பாளரான தேர்வுத்துறை இணை இயக்குனர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து தர்மபுரியில் அவர் தனது இல்லத்தின் தனிமைப்படுத்திக் கொண்டார். இதனால் தேர்வு பணியை கவனிப்பதில் சிக்கல் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது

அதுமட்டுமின்றி தேர்வு துறை கண்காணிப்பாளருக்கும் கொரோனா வைரஸ் பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பத்தாம் வகுப்பு தேர்வுக்கு பொறுப்பாளரான இணை இயக்குனரும் தேர்வு துறை கண்காணிப்பாளருக்கும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளதால் தேர்வு நடக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆனால் திட்டமிட்டபடி பத்தாம் வகுப்பு தேர்வு நடைபெறும் என பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன