10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, பிளஸ்-1 இறுதிநாள் தேர்வு மற்றும் பிளஸ்-2 இறுதிநாள் தேர்வு எழுதாதவர்களுக்கான தேர்வுகள் வருகிற 15ஆம் தேதி தொடங்குகின்றன.  
இந்நிலையில், கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று திமுக, விசிக, பாமக, காங்கிரஸ், இடதுசாரிகள் என்று பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இது தொடர்பாக சென்னை ஹைகோர்ட்டில் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் வழக்கு தொடர்ப்பட்ட நிலையில், இன்று அதனை விசாரித்த நீதிபதிகள் தமிழக அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பினர். மேலும், தேர்வை 1 மாதம் ஒத்திவைப்பது தொடர்பாக பிற்பகலுக்குள் பதிலளிக்க அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதற்கிடையே, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், முதல்வர் உடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். இதனைதொடர்ந்து  அதிகமாக இருப்பதால் குறைய வாய்ப்பில்லை என்றும் 15ம் தேதியிலிருந்து நடைபெற இருந்த தேர்வுகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அரையாண்டு, காலாண்டு வருகை பதிவேடு இதை கருத்தில் கொண்டு அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் தேர்ச்சி என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்