சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நடைபெற்ற ஆலோசனையில், பள்ளிகள் திறப்பு குறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் கருத்துக்கள் பெறப்பட்டன. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், கால தாமதமாக பள்ளிகள் திறக்கப்படும்போது என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென ஆராய அமைக்கப்பட்டுள்ள குழு, தனது அறிக்கையை அளித்ததும் அதுபற்றிய அறிவிப்பு வெளியாகும் என்றார்.

ஊடகங்களுக்கு ஆசிரியர்கள், ஆசிரியர் சங்கங்களை சார்ந்தவர்கள் எவ்விதமான பேட்டியும் அளிக்கக்கூடாது என உத்தரவிட்ட நிலையில், அண்மையில் ஊடகங்களுக்கு பேட்டியளித்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

dailyhunt