புதுச்சேரி; ஜிப்மர் மருத்துவ மேற்படிப்பில் சேர, நேற்று நடந்த நுழைவுத் தேர்வை, 10, ஆயிரத்து, 776 பேர் எழுதினர்.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லுாரியில், எம்.டி., - எம்.எஸ்., படிப்பில், 125 இடங்களும், எம்.டி.எஸ்., படிப்பில், இரண்டு இடங்களும், பி.டி.எப்., படிப்பில், 10 இடங்களும், பி.டி.சி.சி., படிப்பில், 12 இடங்கள் உள்ளன.இந்த இடங்களுக்கான நுழைவுத் தேர்வு, நேற்று புதுச்சேரியில், ஐந்து மையங்கள் உட்பட நாடு முழுதும், 105 நகரங்களில், 133 மையங்களில் நடந்தது. 10 ஆயிரத்து, 776 பேர் பங்கேற்றனர்.

உடல் வெப்ப பரிசோதனை செய்த பின், முகக் கவசம் அணிந்தவர்கள் மட்டும், தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு முடிவுகள், 27ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.'ஜிப்மர் நிர்வாக கட்டடத்திலும், www.jipmer.edu.in என்ற இணையதளத்திலும் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்' என, ஜிப்மர் அறிவித்துள்ளது.