கொரோனா பரவலை தடுக்கும் விதமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் ஒத்திவைக்கபட்ட 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் ஜூலை மாதம் நடைபெறும் என்று ஏற்கனவே கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.

பெற்றோர், ஆசிரியர் சங்கங்கள், தனியார் பள்ளி உரிமையாளர்கள், கட்சித் தலைவர்கள் என பல்வேறு தரப்புகளிடமிருந்து வந்த கோரிக்கைகளின் அடிப்படையில் 10 ஆம் வகுப்புத் தேர்வை மேலும் தள்ளிவைக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

மேலும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் விநியோகமும் நடைபெற்று முடிவடைந்த நிலையில் உயர் நீதிமன்றத்தில் 10 ஆம் வகுப்பை தள்ளி வைக்க கோரி வழக்கு தொடரப்ப்பட்டிருந்தது.

அந்த வழக்கில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ஏன் ஒரு மாதத்திற்கு தள்ளிவைக்கக் கூடாது என்று கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் இது தொடர்பாக இன்று பிற்பகல் 2.30 மணிக்குள் ஜூலை 2 ஆவது வாரத்தில் தேர்வை நடத்தலாமா என்பது குறித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.