ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாற்றுதிறனாளிகளுக்கான நலத்திட் உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் ;

ஆன்லைன் மூலமாக கட்டணம் செலுத்த வேண்டும் என பள்ளிகள் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய அவர் , தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளில் இருந்து மாணவர்களை நீக்கினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இது குறித்து பெற்றோர் அல்லது மாணவர்கள் புகார் அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

தற்போதைய சூழ்நிலையில் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே சாத்தியம் ஆகும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். கொரோனா கூடுதலாக இருக்கும் இடத்தில் வசிக்கும் மாணவர்களை வேன் மூலமாக அழைத்து வந்து தனி அறையில் தேர்வெழுத நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாகவும், மாவட்ட ஆட்சியர்கள் இதனை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

10,11,12ம் வகுப்பு களுக்கான தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் மூன்றாம் வரத்தில் வெளியிடப்படும் என்றார். பாடத்திட்டங்கள் குறைப்பது குறித்து 18 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.