*TNPTF மாநில நிர்வாகிகள் கூட்டம்*



*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் இன்று (03.05. 2020)முற்பகல் 11 மணி முதல் 1.30 மணி வரை காணொளி வழியே நடைபெற்றது.இரண்டரை மணிநேரம் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் 18 பேரும் கலந்துகொண்டு ஆக்கப்பூர்வமான கருத்துக்களை வழங்கினர். கூட்டத்தில் நாளை(04.05.2020) நடைபெறும் மாநில செயற்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிய கூட்டப் பொருட்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.முதன்முறையாக காணொளி வழியே நடத்திய மாநில நிர்வாகிகள் கூட்டம் மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது. இத்துடன் காணொளி வழி நிர்வாகிகள் கூட்ட காட்சிகள் சில*



*நாளை(04.05.2020) நடைபெறும் காணொளி வழி மாநில செயற்குழு க் கூட்டத்திற்கான ID,Password ஆகியவற்றை மாநில துணைத் தலைவர் தோழர் அ.ரஹீம் அவர்கள் அனைத்து மாவட்டச் செயலாளர்கள்,மாநில செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளுக்கு தனித்தனி whatsap எண்ணிற்கு அனுப்பி வைப்பார்.அந்த எண்களை வேறு யாருடனும் பகிர்ந்து கொள்ளாமல் தாங்கள் மட்டும் பயன்படுத்திக் கொள்ள மாவட்டச் செயலாளர்கள்,மாநில செயற்குழு உறுப்பினர்களை தோழமையுடன் கேட்டுக் கொள்கிறேன்.*



*தோழமையுடன்*

*ச.மயில்*

*பொதுச் செயலாளர்*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*