- அம்மீட்டர் (Ammeter): மின்னோட்டத்தின் வலிமையை அளக்க உதவுவது

- அலிமோ மீட்டர் (Anemometer): காற்றின் வேகமும், வீசும் திசையும் அளந்தறிய உதவும் காற்று வீச்சளவி.

- ஆடியோ மீட்டர் (Audiometer): கேள்வித் திறனை அளக்க உதவும் கேளொலி அளவி.

- ஆல்டி மீட்டர் (Altimeter): குத்துயரங்களை அளக்க உதவும் ஒருவகை சிறப்பு திரவமில்லா அழுத்தமானி.

- எலக்ட்ரோஸ்கோப் (Electrosospe): மின்னேற்றம் கண்டு துலக்க உதவும் மின்காட்டி

- கம்யுடேட்டர் (Commutator): மின்னோட்டத் திசையை மாற்ற அல்லது திருப்ப உதவும் மின் திசை மாற்றி, டைனமோ இயந்திரத்தில் மாறு மின்னோட்டத்தை நேர்மின்னோட்டமாக மாற்றுவது.

- கோலரிமீட்டர் (Colorimeter): நிறங்களின் தீவிரத்தை ஒப்புநோக்க உதவும் நிற அளவி.

- கலோரி மீட்டர் (Calorimeter): வெப்பத்தை அளக்க உதவும் வெம்மையளவி

- கால்வனோமீட்டர் (Calvanometer): மின்னோட்டத்தை அளக்க உதவும் நுண் மின்னளவி.

- கிளினிக்கல் தெர்மோமீட்டர் (Clinical Thermometer): மனித உடல் வெப்ப நிலையை அளக்க உதவும் நோயறி வெப்ப அளவி

- குரோனா மீட்டர் (Chronometer): கடல்பயணத்தில் தீர்க்கரேகை அளவை அறிந்து கொள்ள உதவும் கருவி போன்று துல்லியமாகக் கால அளவைக் காட்டும் கால அளவி.

- சாலினோ மீட்டர் (Salinometer): உப்புக் கரைசல்களின் அடர்த்திகளை அளப்பதன் மூலம் அவற்றின் கரைசல் செறிவைத் தீர்மானிக்க உதவும் ஒருவகை தரவமானி (உப்புக்கரைசல் அளவி)

- செய்ஸ்மோ கிராஃப் (Seismograph): நில நடுக்க அதிர்ச்சிகளின் தீவிரத்தையும், தோற்றத்தையும் பதிவு செய்ய உதவும் பூகம்ப அளவி

- குவாட்ரண்ட் (Quadrant): பயண அமைப்பு முறையிலும், வானவியலிலும் குத்துயரங்களையும், கோணங்களையும் அளக்க உதவும் செங்குத்தளவி.

- டிரான்சிஸ்டர் (Transistor) : மின்னாற்றலை மிகைப்படுத்துவதுடன், வெப்ப அயன வால்வுகளின் பண்புகளும் கொண்டதோர் சிறு மின் கூறுப் பொருள்.

- டெலிபிரிண்டர் (Teleprinter): தொலை தூர இடங்களுக்குத் த