புதுடில்லி : இந்தாண்டு சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வுக்கான தேதி குறித்து, ஜூன், 5ம் தேதி முடிவு செய்யப்படும் என, யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. 

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட, மத்திய அரசு பணிகளுக்கான தேர்வை, மத்திய பணியாளர் தேர்வாணையம், ஆண்டு தோறும் நடத்துகிறது. இதன்படி, இந்தாண்டுக்கான, முதன்மை தேர்வு, வரும், 31-ம் தேதி நடைபெறும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனால், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதை அடுத்து, முதன்மை தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக, கடந்த வாரம், யு.பி.எஸ்.சி., அறிவித்தது. இந்நிலையில், யு.பி.எஸ்.சி., நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வு உட்பட அனைத்து தேர்வுகள் நடைபெறும் தேதி குறித்து, ஜூன், 5ல் முடிவு செய்யப்படும். 

தேர்வு குறித்து, 30 நாட்களுக்கு முன், விண்ணப்பதாரருக்கு தெரிவிக்கப்படும்' என, கூறப்பட்டுள்ளது.