தனியார் பள்ளிகள் ஆன்லைனில் பாடம் எடுக்க தடை இல்லை.!!! அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்.!!!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளதாவது:-

தனியார் பள்ளிகள் ஆன்லைனில் வகுப்புகள் எடுக்க தடை இல்லை. ஆசிரியர்களை பள்ளிக்கு வரவழைத்து ஆன்லைனில் பாடம் எடுப்பதற்கே தடை .மேலும் ஊரடங்கின் போது கல்வி கட்டணத்தை வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இந்நிலையில் இந்த கல்வியாண்டில் வரும் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படாது என்பது உறுதியாகி உள்ளது. பள்ளிகள் திறப்பு ஆகஸ்ட் மாதம் தான் இருக்கும் என்பது அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் சொல்கின்றன. ஜூலையில் பள்ளிகள் திறக்கப்படுமா என்பதை தமிழக அரசு அறிவித்தால் தான் உறுதியாக தெரியவரும்.

பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் பாடத்திட்டத்தை குறைப்பது தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு தரும் அறிக்கையின் அடிப்படையில் பாடத்திட்டத்தின் குறைப்பு பற்றி முடிவெடுக்கப்படும் இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.