அரியலூர் மாவட்டம் துப்பாபுரம் கிராமத்தில் கல்வி கற்று கொடுக்கும் ஆசிரியை கண்ணகி தன்னிடம் படிக்கும் மாணவர்களின் குடும்பத்திற்கு ரூ.1000 நிதியுதவி வழங்கி அனைவருக்கும் எடுத்து காட்டாக மாறியுள்ளார்.துப்பாபுரம் அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக இருக்கும் கண்ணகி கடந்த 12 ஆண்டுகளாக அதே கிராமத்தில் சேவை புரிந்து வருகின்றார்.

கல்வி சேவை மட்டும் இன்றி கிராமமக்களின் நிலை குறித்தும் நன்கு அறிந்து வைத்துள்ளார்.இந்நிலையில் ஊரடங்கால் வேலையும் வருமானமும் இல்லாததால் தன்னிடம் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் சிரமப்படுவதை கண்ணகி டீச்சர் அறிந்துள்ளார்.இந்த இக்கட்டான தருணத்தில் அவர்களுக்கு ஏதாவாது உதவி செய்ய வேண்டும் என யோசித்திருக்கிறார்.

வறுமையான பின்புலம் உள்ள மாணவர்களின் குடும்பத்தை தேர்வு செய்து அவர்களுக்கு ரூ.1000 கொடுக்குமாறு கண்ணகி ஆசிரியரிடம் அவரது மகன் தெரிவித்துள்ளார்.

மகன் அளித்த யோசனையின் படி தன்னிடம் படிக்கும் 62 மாணவர்களில் 41 மாணவர்களின் குடும்பம் ஏழ்மையில் இருப்பதை தெரிந்துகொண்டார்.36 மாணவர்களின் குடும்பத்திற்கு (தலா ரூ.1000 வீதம் ரூ.36,000 -ஐ) கண்ணகி டீச்சர் தனது சொந்த நிதியை அளித்தார்.மீதி உள்ள 5 மாணவர்கள் குடும்பத்திற்கான உதவித்தொகையை (தலா ரூ.1000 வீதம் ரூ.5,000) பரமேஸ்வரி ஏற்றுக்கொண்டார்.

இதையடுத்து அவர்கள் இருவரும் துப்பாபுரம் கிராமத்திற்கு சென்று தன்னிடம் படிக்கும் மாணவர்களின் பெற்றோரை அழைத்து அவர்களிடம் ரூ.1000 அளித்ததுடன், இந்த தொகையை வைத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய ஆகரங்களை பிள்ளைகளுக்கு வாங்கிக்கொடுங்கள் என தாயுள்ளதோடு அறிவுறுத்தியுள்ளார்.
தலைமை ஆசிரியை கண்ணகியின் இந்த மனிதநேயமிக்க உதவியை கண்டு துப்பாபுரம் கிராமமக்கள் நெகிழ்ச்சியுடன் அவருக்கு நன்றி தெரிவித்தனர். அந்த கிராமத்தில் மட்டும் இன்றி தற்போது இணையத்திலும் ஒரே நாளில் ஆசிரியை ஹீரோவாக மாறியுள்ளார்.