சென்னை : அரசு பள்ளி கணினி ஆசிரியர்களுக்கு, 'பைத்தான்' என்ற, சாப்ட்வேர் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, விடுமுறை காலத்தில், கற்றல் திறனை வளர்க்கும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு, நேரடி பயிற்சி வகுப்புகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், 'ஆன்லைன்' வழி கற்பித்தல் பயிற்சிக்கு, பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, அரசு பள்ளி கணினி ஆசிரியர்களுக்கு, பைத்தான் என்ற சாப்ட்வேர் பயிற்சியை, ஆன்லைன் வாயிலாக வழங்க, பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. 
தனியார் கல்வி நிறுவனம்வழியாக, இந்த பயிற்சி வகுப்புகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இது குறித்து, ஆசிரியர்கள், மாவட்ட வாரியாக தங்கள் விபரங்களை பதிவு செய்து கொள்ளுமாறு, பள்ளி கல்வி இயக்குனர், கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.