முதல் முறையாக ஓய்வூதியம் பெற கருவூலம் வர அவசியம் இல்லை  - அரசாணை வெளியீடு 

ஓய்வூதியர்களின் சிரமங்களை குறைக்கும் வகையில் மதிப்பிற்குரிய கருவூலக் கணக்குத் துறை ஆணையர் அவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

முதல் ஓய்வூதியம்/கம்யூட்டேசன் தவிர பிற காரணங்களான திருத்திய ஓய்வூதியம் பெறுதல், கூடுதல் ஓய்வூதியம் பெறுதல் உள்ளிட்டவைகளுக்கு ஓய்வூதியர் நேரில் வர தேவையில்லை என்றும் AG ஒப்பளிப்பு மற்றும் இதர ஆவணங்களின் அடிப்படையில் நிலுவை தொகையை மாதாந்திர ஓய்வூதியத்துடன் சேர்த்து அனுப்பி வைக்க வேண்டும் என ஏற்கனவே கருவூலங்களுக்கு கடிதம் வாயிலாக தெரிவிக்க பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக அரசு அ.ஆ.எண். 41 நிதித்துறை நாள் 26.2.2020 ன் படி முதல் முறையாக ஓய்வூதியம் மற்றும் கம்யூடேசன் பெறுவதற்கு Jeevan Praman portal வாயிலாக e - mustering மூலம் ஆஐராகி கருவூலத்திற்கு நேரில் வராமலேயே ஓய்வூதியம் பெற்றுக் கொள்ள வழிவகை செய்து ஆணை வெளியிட்டுள்ளது.

பரிந்துரை செய்த மதிப்பிற்குரிய கருவூலத்துறை ஆணையர் அவர்களுக்கும், பரிந்துரையை ஏற்று அரசாணை பிறப்பித்த தமிழக அரசுக்கும் ஓய்வூதியர்கள் மற்றும் ஓய்வூதியர் சங்கங்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.