மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி 27.5.20 அன்று தொடங்க உள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் வெளிமாவட்டத்தில் தங்கி இருக்கும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு போக்குவரத்து வசதி செய்த விவரங்கள் மற்றும் தங்கள் மாவட்டத்தில் உள்ள விடை திருத்தும் மையத்திற்கு தினந்தோறும் வந்து செல்ல போக்குவரத்து வசதி செய்த விவரத்தினையும் பள்ளிக் கல்வி இயக்குநரின் மின்னஞ்சலுக்கு அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.