கற்றல் -கற்பித்தலில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் குறித்து ஆராய, அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவில் கூடுதலாக 4 உறுப்பினர்களை நியமித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தீரஜ் குமார் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தாக்கம் மற்றும் ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த மார்ச் 17 முதல் பள்ளிகள் மூடப்பட்டன. இந்நிலையில் வரும் கல்வி ஆண்டுக்கான வகுப்புகளை எப்போது தொடங்குவது? சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தலாமா? பாடத்திட்டங்களை குறைக்கலாமா? வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆராய்வதற்கு பள்ளிக்கல்வித்துறை ஆணையர் சி.ஜி.தாம்சன் வைத்யன் தலைமையில் 12 பேர் கொண்ட வல்லுநர் குழுவை பள்ளிக் கல்வித்துறை அமைத்தது.

 
இந்நிலையில் இந்த குழுவில் மேலும் 4 உறுப்பினர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர். அறிக்கை தாக்கல் செய்ய வல்லுநர் குழுவுக்கு ஏற்கனவே 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் கூடுதலாக மேலும் ஒரு வாரம் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.