'தினமலர்' மற்றும், 'அமிர்தா விஸ்வ வித்யாபீடம்' இணைந்து வழங்கும், 'ஆன்லைன் வழிகாட்டி' நிகழ்ச்சியில் இன்று, விண்வெளி அறிவியல் குறித்து, 'இஸ்ரோ' முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை, நேரலையில் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்குகிறார். 

5 வயதில் ரூ. 12 கோடி!நேற்றைய நிகழ்ச்சியில், சைபர் செக்யூரிட்டி வல்லுனர், சையத் முகமது பேசுகையில், ''5 வயது சிறுவன், 12 கோடி ரூபாய் சம்பாதிக்க முடியும் என்றால், அது சைபர் செக்யூரிட்டி துறையில் மட்டுமே சாத்தியம். ''இத்துறைக்கு தேவையான திறன்களை, ஆர்வம் இருக்கும் எவரும் கற்றுக்கொள்ள முடியும். வீட்டில் இருந்து, ஆன்லைனில் கூட கற்றுக் கொள்ள முடியும்,'' என்றார். தொடர்ந்து, கலை, அறிவியலில் வழங்கப்படும் ஏராளமான படிப்புகள் மற்றும் வாய்ப்புகள் குறித்து, கல்வி ஆலோசகர் மாறன் மற்றும், 'மரைன் கேட்டரிங்' துறையின் முக்கியத்துவம் குறித்து, சுரேஷ் குமார் ஆகியோர் விளக்கமளித்தனர். 

இன்று...இன்று காலை, 10:00 முதல், 12:00 மணி வரை நடக்கும் நேரலை நிகழ்ச்சியில், விண்வெளி அறிவியல் துறையில் சாதிக்க, வளர்த்துக் கொள்ள தேவையான திறன்கள் குறித்து, இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை ஆலோசனை வழங்குகிறார். இன்டர்நெட் ஆப் திங்க்ஸ் - ஐ.ஓ.டி., மற்றும் ஆர்ட்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் - ஏ.ஐ., குறித்து, அமிர்தா விஸ்வ வித்யாபீடம் பேராசிரியர் ஸ்ரீராம் வாசுதேவன் விளக்கம்அளிக்க உள்ளார். 'கோவிட்- - 19'க்கு பின் வேலைவாய்ப்புகள் எப்படி இருக்கும் என்பது குறித்த மாணவர்களது சந்தேகங்களுக்கு பதில் அளிக்கிறார், பொருளாதார நிபுணர் சத்யகுமார். 

வரும், 17ம் தேதி வரை தினமும் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், பங்கு பெற, மற்றும் கல்வியாளர்களுடன், நேரலையில் இணைய, www.kalvimalar.com இணையதளத்தில், பெயர், மொபைல் எண், இ-மெயில் முகவரி மற்றும் மாவட்டம் ஆகிய தகவல்களை அளித்து, உடனே பதிவு செய்யலாம். இந்நிகழ்ச்சியில், எச்.சி.எல்., டெக்னாலஜிஸ் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள், 'பவர்டு பை ஸ்பான்சர்' களாக பங்கேற்கின்றன. வேல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ், டெக்னாலஜி அண்டு அட்வான்ஸ்டு ஸ்டடீஸ், ஸ்ரீ சாய்ராம் கல்வி நிறுவனங்கள், இ-பாக்ஸ் காலேஜ்ஸ் மற்றும் ஸ்ரீ ஈஸ்வர் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் ஆகிய நிறுவனங்கள், உடன் வழங்குகின்றன.* வழிகாட்டி நேரலையில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையுடன் இணையுங்கள்...------