கரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கபட்டுள்ள பொதுத்தேர்வுகளுக்கான அட்டவணை சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் பொதுத்தேர்வு நடத்த பல புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

புதிய கட்டுப்பாடுகள்

தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் கடைசி தேர்வு மட்டும் மீண்டும் நடத்தப்பட உள்ளது. ஏற்கனவே நடைபெற்ற கடைசி தேர்வில் சுமார் 36 ஆயிரம் மாணவர்ர்கள் பங்கேற்கவில்லை. இந்நிலையில் அவர்களுக்கு மீண்டும் மறுதேர்வு நடைபெற உள்ளது. ஏற்கனவே நடந்து முடிந்த தேர்வுகளுக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணியும் ஜூன் 27-ம் தேதி முதல் தொடங்க உள்ளது.

இதையும் படிக்க: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு புதிய அட்டவணை வெளியீடு!

எஸ்எஸ்எல்சி தேர்வுகள் ஜூலை 15-ம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு நடத்தும் போதும் விடைத்தாள்களை திருத்தும் போதும் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் ஒரு தேர்வு அறையில் 10 மாணவர்கள் மட்டுமே அமர வேண்டுமென கூறப்பட்டுள்ளது

கோப்புப்படம்
தமிழக அரசின் அறிக்கை

எஸ்எஸ்எல்சி மற்றும் பதினோறாம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்கள் படிக்கும் பள்ளிகளிலேயே தேர்வு நடத்தப்படும்.

தேர்வு எழுதும் மாணவர்கள், ஆசிரியர்கள், அதிகாரிகள் பயன்படுத்த 46 லட்சம் மாஸ்குகள் இலவசமாக வழங்கப்படும்.

தேர்வு நடைபெறும் இடங்களில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் இருந்தால் மாற்று இடம் அறிவிக்கப்படும். அவர்களுக்காக சிறப்பு தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.

விடுதியில் தங்கி படித்து வரும் மாணவர்களுக்கு தேர்வு முடியும் வரை விடுதிகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சிறப்பு பேருந்து வசதிகள் செய்து தரப்படும். பள்ளி வாகனங்களும் இதற்காக பயன்படுத்தப்படும்.
தேர்வுக்கான ஹால் டிக்கெட் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அப்படி செய்ய முடியாத மாணவர்கள் தலைமை ஆசிரியரிடம் இருந்து அதனை பெற்றுக்கொள்ளலாம்.
அதிகம் பாதிப்பு உள்ள பகுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்கு அவர்கள் வீட்டிற்கே சென்று ஹால் டிக்கெட் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.