சென்னை : பட்டப்படிப்பு மாணவர்கள், 'இன்டர்ன்ஷிப்' என்ற களப் பயிற்சியை, 'ஆன்லைனில்' மேற்கொள்ள, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., அனுமதி அளித்து உள்ளது. 

கொரோனா ஊரடங்கு காரணமாக, கல்வி முறையில், பல்வேறு மாற்றங்களை, மத்திய, மாநில கல்வி நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன. தற்போது, ஊரடங்கு அமலில் உள்ளதால், மாணவர்கள் களப் பயிற்சிக்காக வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ஆன்லைன் வழி களப் பயிற்சிக்கு அனுமதி அளித்து, கல்லுாரிகளுக்கு, பல்கலை மானிய குழு ஒப்புதல் தந்துள்ளது. 'இன்டர்ன்ஷிப்புக்கு நிர்ணயிக்கப்பட்ட கால அளவை குறைத்து கொள்ளலாம்; தாமதமாகவும்மேற்கொள்ளலாம்' என்ற, ஆலோசனைகளையும், யு.ஜி.சி., வழங்கி உள்ளது.