மதுபானக் கடைகளில் ஏற்படும் கூட்ட நெரிசலைச் சரிசெய்ய ஆந்திர அரசு ஆசிரியர்களை அமர்த்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனா அச்சத்தால் நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சில இடங்களுக்கு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி ஆந்திராவில் சில இடங்களில் மது விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டது.

லாக்டவுனின் இருந்த குடிமகன்கள், இந்த தளர்வு அறிவித்த உடன் டாஸ்மாக் வாசலில் கும்பலாக குவிந்தனர். இதனை போலீஸாரால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனை தொடர்ந்து ஆந்திரா, விசாகப்பட்டினத்தில் உள்ள மதுபானக் கடைகளில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த தன்னார்வலர்களாக அரசுப் பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்களை நியமிக்க ஆந்திர அரசு முடிவு செய்தது.

அதனைதொடர்ந்து மதுபானக் கடைகளை மீண்டும் திறந்த 2வது நாளில் குடிமகன்கள் வந்து குவிந்தனர். அப்போது அவர்கள் யாரும் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்கவில்லை என்று புகார் எழுந்துள்ளது.

காவல்துறையினரும் தன்னார்வலர்களும் சேர்ந்தும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதால், ஆசிரியர்கள் மாநில அரசால் அமர்த்தப்பட்டனர். மதுபானம் வாங்க வரிசையில் நின்றவர்களுக்கு ஆசிரியர்கள் டோக்கன்கள் விநியோகிக்கும் வேலையை மேற்கொண்டனர் என்றும் மேலும் கூட்டத்தை சீர் செய்ய உதவினர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்

இதுகுறித்து சில இடங்களில் செய்தியார்களிடம் பேசிய ஆசியர்கள், தங்களுக்கு அருகிலுள்ள காவல் நிலையத்திற்குச் சென்று விவரங்களைக் கேட்டறிய மாவட்டக் கல்வி அலுவலரிடமிருந்து வாய் வழி உத்தரவுகளைப் பெற்றதாகவும், அங்கிருந்து கூட்டத்தை நிர்வாகிக்க அவர்களுக்கு ஒரு மதுக் கடை ஒதுக்கப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.

மேலும் இவர்களில் சில ஆசிரியர்கள் செய்தியாளர்களிடம் பேசும்போது மதுக் கடைகளில் கூட்டத்தை நிர்வாகிக்க பணிக்கப்பட்ட போது குற்ற உணர்ச்சி ஏற்பட்டதாகவும் இந்த தொழிலை மேற்கொள்வதற்காக தாங்கள் பணிக்கு வரவில்லை என்று கூறியுள்ளார்.

ஆந்திர அரசின் இந்த நடவடிக்கையைத் தெலுங்கு தேசம் கட்சியும் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியும் விமர்சித்துள்ளன.