சென்னை : டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளை எழுதும், போட்டி தேர்வர்களின் குறைகளை தீர்க்க, 'மொபைல் ஆப்' என்ற, செயலி உருவாக்கப்பட உள்ளது. 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், தமிழக அரசு துறைகளில், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, பல்வேறு போட்டி தேர்வுகள் நடத்தப்படுகின்றன.ஆண்டுக்கு, 20 லட்சம் பேருக்கு மேல் தேர்வு எழுதும் நிலையில், அவர்களின் குறைகளை தீர்க்கும் வகையில், 'மொபைல் ஆப்' என்ற செயலியை உருவாக்க, டி.என்.பி.எஸ்.சி., முடிவு செய்துள்ளது. இதற்கான, டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.