சென்னை : மாநிலங்களுக்கு இடையிலான பயணத்துக்கு, 'இ- - பாஸ்' பெறும் வகையில், மத்திய தகவல் மையம், இணையதளத்தை துவக்கி உள்ளது.

நாட்டில், பல்வேறு மாநிலங்களுக்கு இடையே, அத்தியாவசிய தேவைகளுக்கான பயணத்துக்கு, அனுமதி பெறும் வகையில், மத்திய தகவல் மையம், இணையதள வசதியை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி, http://serviceonline.gov.in/epass/ என்ற, இந்த இணையதளத்தில், தற்போதைய நிலையில், ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், அசாம், பீஹார், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட, 17 மாநிலங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழகம், டில்லி, கோவா, குஜராத், ஹரியானா உள்ளிட்ட, மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இடம்பெறவில்லை.