தேர்வு சந்தேகங்கள் போக்க ஆலோசனைபத்தாம் வகுப்பு தேர்வு குறித்த, மாணவர்களின் சந்தேகங்களை போக்க, மாவட்ட வாரியாக ஆலோசனை வழங்க, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:பத்தாம் வகுப்பு தேர்வு தொடர்பாக, மாணவர்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டும். அவர்கள் தைரியமாக தேர்வு எழுத, நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும். மாணவர்களின் சந்தேகங்களை தீர்க்க, ஒவ்வொரு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திலும், தலா, ஐந்து முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை பணியில் அமர்த்த வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.