பறக்கும் பாலூட்டியான வெளவாலுக்கு கால்கள் நிற்பதற்கு ஏற்ற வகையில் அமையவில்லை. பறப்பதற்கு ஏற்ற வகையில் முன்னங்கால்களும் பின்னங்கால்களும் சவ்வால் இணைக்கப்பட்டிருக்கின்றன. பகல் நேரத்தில் எதிரிகளிடமிருந்து தப்பிப்பதற்காக மரக் கிளைகளைப் பின்னங்கால்களால் பற்றிக்கொண்டு தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருக்கின்றன.

இப்படித் தொங்கும்போது எதிரிகளின் கண்களுக்குச் சட்டென்று இவை புலப்படுவதில்லை. அது மட்டுமின்றி, பறவைகளைப்போல நிலத்திலிருந்து வெளவால்களால் பறந்து செல்ல முடியாது. தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருக்கும்போது எளிதாகப் பறந்து சென்றுவிட முடியும். தலைகீழாகத் தொங்கும்போது குறைவான சக்தியே செலவாகிறது என்பதாலும் வெளவால்கள் தலைகீழாகத் தொங்குகின்றன