தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது தற்போது வரை 58 ஆக இருந்து வருகிறது. ஓய்வு பெறும் வயதை 58ல் இருந்து 59 வயதாக அதிகரித்து தமிழக அரசு இன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு அனைத்து தமிழக அரசு ஊழியர்கள், அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதனை உடனடியாக அமலுக்கு வரும்  தமிழகஅரசு அறிவித்துள்ளது. எனவே இந்த மாதத்தில் ஓய்வு பெறுவோருக்கும் இந்த அரசாணை பொருந்தும் என தெரிகிறது.
(30.4 - 2020 வரை ஓய்வு பெற்றவர்கள் மற்றும் 30.4.2020க்கு முன் ஓய்வு பெற்று 3 1-5 - 2020 வரை பணி நீட்டிப்பில் உள்ளவர்களுக்கு இந்த அரசாணை பொருந்தாது எனத் தெரிகிறது. அதாவது 2-5 - 2020க்கு பிறகு ஓய்வு பெறவுள்ளவர்களுக்கு முழுமையாக ஓராண்டு கிடைக்கும். 1-6-2020 க்கு பிறகு ஓய்வு பெறுபவர்களுக்கு இரண்டாண்டுகள் கிடைக்கும் அதாவது பணி நீட்டிப்பில் 60 வயது வரை பணி புரியலாம்)
அத்துடன் ப்ரோமோசன் உள்ளிட்டவை சிலருக்கு தாமதம் ஏற்படலாம். ஏனெனில் ஒருவர் ஓய்வு பெற்றால் மட்டுமே இன்னொருவர் அந்த இடத்திற்கு வரமுடியும் என்பதால் இது ப்ரோமோசனை சிலருக்கு பாதிக்கலாம்.
எனினும் 58 வயதில் இருந்து 59 வயதாக ஒய்வு பெறும் வயதை அதிகரித்து இருப்பது தமிழக அரசு ஊழியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.