பீஜிங்: கொரோனா வைரசால், சீனாவில் மூடப்பட்டிருந்த பள்ளிகள், படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன. விமான போக்குவரத்தும் துவங்கியுள்ளது.நம் அண்டை நாடான சீனாவின், வூஹான் நகரில், முதல் முதலாக கொரோனா வைரஸ் உருவாகி, மற்ற நாடுகளுக்கு பரவியது. இதனால், கடந்தாண்டு டிசம்பரில் இருந்து, சீனாவில், ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது.வூஹான், பீஜிங், ஷாங்காய் ஆகிய முக்கிய நகரங்களில், அனைத்து விதமான போக்குவரத்தும் முடங்கியது. பள்ளி, கல்லுாரிகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன.கடந்த ஒரு மாதமாக வைரஸ் பாதிப்பு கணிசமாக குறையத் துவங்கியதை அடுத்து, பாதிப்பு அதிகம் உள்ள நகரங்களை தவிர, மற்ற நகரங்களில் கடைகள் திறக்கப்பட்டன.சீனாவின் வர்த்தக தலைநகரமாக கருதப்படும் ஷாங்காயில், நேற்று முதல், உயர் நிலை பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் துவங்கின.