பத்தாம் வகுப்பு தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் வந்த பிறகு அரசு கூர்ந்து கவனித்து நடவடிக்கை எடுக்கும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், பத்தாம் வகுப்பு தேர்வில் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்படுமா என்ற கேள்விக்கு இந்த பதிலை கொடுத்துள்ளார். அதேபோல் மேலும் அவர் கூறுகையில், நீட் தேர்வுக்கான பயிற்சிகள் ஜூன் இரண்டாம் வாரத்தில் தொடங்க உள்ளது. இந்த ஆண்டு நீட் தேர்வில் 100 அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெறுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது எனவும் தெரிவித்தார்