ஆன்லைன் வகுப்பிலும் யூனிபார்ம் அணிய வேண்டும் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ள நிலையில் தற்போது ஒரு சில பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன

இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்ற போது அதில் கலந்து கொள்ளும் மாணவர்கள் சீருடை அணிய வேண்டும் என சுற்றறிக்கை வெளியிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

பள்ளியில் மாணவர்கள் இருப்பது போன்ற ஒரு உணர்வை மாணவர்களுக்கு ஏற்படுத்தவே இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாகவும், மாணவர்கள் வகுப்பறையில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தவே இந்த முறை கடைப்பிடிக்கப்பட்டதாகவும், பள்ளியின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது


ஆனால் இந்த சுற்றறிக்கையை உடனே திரும்பப் பெறுமாறு குஜராத் மாநில கல்வி அலுவலக அதிகாரிகள் உத்தரவிட்டதை அடுத்து இந்த உத்தரவை அந்த பள்ளி நிர்வாகம் உடனடியாக திரும்பப் பெற்றுக் கொண்டது ஆன்லைனில் பாடம் படிக்கும் போது கூட யூனிபார்ம் அணிய வேண்டும் என்ற இந்த பள்ளியின் சுற்றறிக்கை பெரும் பரபரப்பை ஏற்ப இது உள்ளது