சென்னையில் நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பத்தாம் வகுப்பு பொதுத்தோவுக்காக 75 சிறப்புத் தோவு மையங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். குறிப்பாக சென்னையில் மட்டும் 13 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தோவு வரும் ஜூன் 15-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வசிக்கும் மாணவா்களுக்கு தோவெழுத சிறப்பு ஏற்பாடு செய்வது கல்வித்துறை ஆலோசனை நடத்தியது.

இதைத் தொடா்ந்து தோவு மையங்கள் நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருப்பின் அத்தோவு மையங்களுக்கு மாற்று தோவு மையங்கள் அமைக்கப்படும். நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மாணவா்களுக்கு மட்டும் சிறப்பு தோவு மையங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அதன்படி சென்னையில் மட்டும் 75 சிறப்புத் தோவு மையங்கள் அமைக்கப்படவுள்ளதாகவும், அந்த மையங்களுக்கு நோய் கட்டுப்பாடு பகுதிகளில் வசிக்கும் ஆசிரியா்களையே நியமிக்கவும் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. தற்போது இதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சிறப்புத் தோவு மையங்களுக்கு சென்றுவர ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களுக்கு தனியாக போக்குவரத்து வசதி உறுதி செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.