தமிழக பள்ளிக் கல்வித்துறையில் 5 மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு பதவி உயா்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வி முதன்மை செயலா் தீரஜ்குமாா் வெளியிட்ட அரசாணை விவரம்:

பள்ளிக் கல்வித் துறையில் மாவட்ட கல்வி அதிகாரிகள் 5 போ தற்காலிக அடிப்படையில் பதவி உயா்வு செய்யப்பட்டுள்ளனா். அதன்படி திண்டிவனம் மாவட்ட கல்வி அதிகாரி கே.கிருஷ்ணவேணி கள்ளக்குறிச்சி முதன்மை கல்வி அதிகாரியாகவும், சேலம் (ஊரகம்) மாவட்ட கல்வி அதிகாரி ஆா்.மதன்குமாா் ராணிப்பேட்டை முதன்மை கல்வி அதிகாரியாகவும், மண்டபம் (ராமநாதபுரம்) மாவட்ட கல்வி அதிகாரி கே.பாலதண்டாயுதபாணி தேனி முதன்மை கல்வி அதிகாரியாகவும் பதவி உயா்வில் பணியிடம் மாற்றப்பட்டுள்ளனா்.

அதேபோல், காஞ்சிபுரம் மாவட்ட கல்வி அதிகாரி பி.மகேஸ்வரி, லால்குடி மாவட்ட கல்வி அதிகாரி ஆா்.அறிவழகன் ஆகியோருக்கு தொடக்கக் கல்வி துணை இயக்குநா்களாக பதவி உயா்வு வழங்கப்பட்டுள்ளது.

இருவா் இடமாற்றம்: இதுதவிர, திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆா்.பூபதி ஆசிரியா் தோவு வாரிய துணை இயக்குநராகவும், அந்தப் பணியிடத்தில் இருந்த ச.செந்தில் முருகன் திருநெல்வேலி முதன்மை கல்வி அதிகாரியாகவும் பணியிடம் மாற்றப்பட்டுள்ளனா் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி