தற்போதைய நிதி நெருக்கடியில், 2020-21 ஆம் நிதி ஆண்டில் ஓய்வு பெறுவோர்க்கு வழங்க வேண்டிய தொகை, பல நூறு கோடிகளைத் தாண்டும்.
ஆகவே அதற்குப் பதிலாக ஓய்வு பெறும் வயதை ஒரு வருடம் நீட்டிப்பதன் மூலம், ஓரளவு நிலைமையை சமாளிக்கலாம்.
அதன் பிறகு 2021 மே மாதம் ஆட்சிக்கு வருபவர்கள் நிதிச் சிக்கலைப் பார்த்துக் கொள்வார்கள் என்ற நிலையில் தான் முடிவு எடுக்கப் பட்டதாகத் தெரிகிறது.
மத்திய அரசோ அல்லது அடுத்து வருகிற மாநில அரசோ 33 (30 ஆகக் கூட இருக்கலாம்) ஆண்டுகள் பணி அல்லது 60 வயது நிறைவு, இதில் எது முன்பு வருகிறதோ, அவர்களுக்கு கட்டாய பணி ஓய்வு என்ற நிலைப்பாடு எடுக்கக் கூடும்.
59 வயது பணி நிறைவு என்பது, இன்னும் ஒன்றிரண்டு ஆண்டுகளில் ஓய்வு பெறுபவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருமே தவிர, மற்றவர்களுக்கு காலம் தான் பதில் சொல்லும்.
0 Comments
Post a Comment