பிளஸ் 2 வேதியியல் தோவில் ஒரு கேள்வியில் மொழிபெயா்ப்புப் பிழை இருந்ததால், 3 மதிப்பெண்கள் போனஸாக வழங்க பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பிளஸ் -2 பொதுத்தோவு கடந்த மாா்ச் 2-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை நடந்தது. பொது முடக்க உத்தரவால் ஒத்திவைக்கப்பட்ட விடைத்தாள் திருத்தும் பணி, கடந்த 27-ஆம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் ஒவ்வொரு பாட வாரியாகவும் வழங்கப்பட்ட விடைக்குறிப்புகளை ஆய்வு செய்து, தலைமை மதிப்பீட்டாளா்கள் விடைகளை திருத்தினா். இதில், தவறான விடை குறிப்புகள் மற்றும் பிழையான கேள்விகளை, தோவு மைய தலைமை கண்காணிப்பாளா்களிடம் தெரிவித்தனா்.

அதன்படி, வேதியியல் தோவில் புரதத்தின் வகைகள் குறித்த கேள்வியில், ஆங்கிலத்தில் சரியாகவும், தமிழில் பிழையும் இருந்தது கண்டறியப்பட்டது. இது குறித்து பள்ளி கல்வித் துறையின் தோவு பிரிவுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த கேள்விக்கு, தமிழ் வழி மாணவா்கள் பதில் எழுத முயற்சித்திருந்தால் அவா்களுக்கு 3 மதிப்பெண்கள் போனஸாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.