பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

 
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி தொடங்கி மார்ச் 24-ந் தேதி வரை நடந்து முடிந்தது. லாக்டவுன் காரணமாக விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை தவிர தமிழகத்தின் மற்ற அனைத்து மாவட்டங்களிலும் விடைத்தாள் திருத்தும் பணி அண்மையில் தொடங்கி உள்ளது.

இதுகுறித்து நிருபர்களிடம் செங்கோட்டையன் கூறியதாவது:-

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வரும் ஜூலை மாதம் வெளியாகும். தற்போதைக்கு பள்ளிகளை திறக்க வாய்ப்பு இல்லை.பள்ளிகள் திறப்பு தாமதமாவதால், பாடங்கள் குறைப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும். இதற்காக 16 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு ஆலோசனைக்கு பிறகு முதல்வருடன் பேசி பாடங்கள் குறைப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.