ஓசூர்: இதுவரை கொரோனா பாதிப்பு இல்லாத பச்சை மண்டலமாக கிருஷ்ணகிரியில், புதிதாக 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


தமிழகத்திலேயே கொரோனா பாதிப்பு இல்லாத பச்சை மண்டலமாக கிருஷ்ணகிரி மாவட்டம் இருந்து வந்தது. இந்நிலையில், நேற்று 2 பெண்களுக்கு, அங்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


latest tamil news

சூளகிரி காமராஜ் நகரை சேர்ந்த பூ வியாபாரம் செய்து வரும், 60 மற்றும், 52 வயது மதிக்கத்தக்க இரு பெண்கள், சமீபத்தில் கர்நாடகா மாநிலம் சென்று வந்தனர். அவர்களுக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் இரு பெண்களுக்கும், கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து பச்சை மண்டலத்தை இழந்து, ஆரஞ்சு மண்டலமாக கிருஷ்ணகிரி மாறி உள்ளது.

https://www.dinamalar.com/news_detail.asp?id=2533510