நான்காம் கட்ட ஊரடங்கு நாளை முடிவடைய உள்ள நிலையில், தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகள் தொடர்பாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

நாளையுடன் நான்காவது கட்ட ஊரடங்கு முடிவடைகிறது. அடுத்த ஒரு மாதத்திற்கு கட்டுப்பாட்டு பகுதிகளைத் தவிர மற்ற பகுதிகளில் எவையெல்லாம் இயங்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது

ஜுன் 1 முதல் புதிய வழிமுறைகள் அமலுக்கு வரும். ஜுன் 8 முதல் கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டுத்தலங்கள் திறக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஜுன் 8 முதல் உணவகங்கள், மால்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் மற்றும் கல்வி பயிற்சி நிலையங்கள் மாநில / யூனியன் பிரதேச அரசுகள் உடன் ஆலோசித்த பிறகு திறக்கலாம். நிலைமைக்கு ஏற்றவாறு தியேட்டர்கள், ஜிம், மெட்ரோ ரயில், சர்வதேச விமான சேவை ஆகியவை அனுமதிக்கப்படுவது சூழலுக்கு ஏற்ப முடிவு செய்யப்படும்.

இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை அத்தியாவசிய தேவை இன்று பொது வெளியில் நடமாடுவது தற்போது, போல தடை செய்யப்பட்டுள்ளது.கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் இறுதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. அங்கு, அத்தியாவசிய சேவைகள் மட்டுமே இருக்கும்.