அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1058 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டி எழுத்துத் தேர்வை 2017-ம் ஆண்டு செப்டம்பர் 16-ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது. இந்த தேர்வை ஒரு லட்சத்து 33 ஆயிரம் பேர் எழுதினர்.

2017 -ம் ஆண்டு நவம்பர் 7-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாக புகார்கள் கிளம்பின. மேலும் இந்த தேர்வில் வெளி மாநிலத்தைச் சேர்ந்த பலர் வெற்றி பெற்றிருந்தனர். அது குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையின் அடிப்படையில் 200க்கும் மேற்பட்டோர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதில் குற்றச்சாட்டுகள் உண்மையானதன் அடிப்படையில் ஆசிரியர் தேர்வு வாரியம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டது. விசாரணையின் முடிவில் முறைகேட்டில் ஈடுபட்ட 199 பேர் வாழ்நாள் முழுவதும் ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வுகளை எழுதுவதற்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.இதுகுறித்த அறிவிப்பு விரைவில் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உள்பட 11 நகரங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு