1 ) 2019-2020 ம் ஆண்டில் 10 ம் வகுப்பு பயின்று வரும் மாணவர்கள் பயின்று வரும் பள்ளிகளே 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்களாக செயல்பட உள்ளதால் ஒரு அறைக்கு 10 மாணவர்கள் வீதம் தேர்வெழுத உள்ளவாறு போதுமான அறைகள் மற்றும் தேவையான டெஸ்க் , பெஞ்சுகள் உள்ளதா என்பதற்கான அறிக்கையினை அனைத்து உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களும் 20.05.2020 க்குள் சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் .

2 ) பள்ளியில் 10 ம் வகுப்பு தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் இருப்பிட முகவரி மற்றும் கைப்பேசி எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பள்ளி ஆசிரியர்கள் மூலம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பெற்று பள்ளி தலைமையாசிரியர்கள் 20.05.2020 க்குள் ஒருங்கிணைத்து வைக்க வேண்டும் . இதே போன்று அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதவுள்ள பள்ளிக்கு அவர்களாகவே வருகை தந்து விடுவார்களா ( அ ) போக்குவரத்து வசதி தேவைப்படுகிறதா என்ற விவரத்தினை மாணவர்களின் பெற்றோர்களிடமிருந்து பெற்று அதனடிப்படையில் போக்கு வரத்து வசதி தேவைப்படும் விவரத்தினை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள தயாரித்து 20.05.2020 க்குள் சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் .

3 ) 10 ம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்கள் வெளி மாவட்ட மற்றும் வெளி மாநிலங்களில் இருப்பின் அவர்கள் அனைவரையும் 25.05.2020 க்குள் அவர்களின் இருப்பிடத்திற்கு பள்ளி தலைமையாசிரியர்கள் வரவழைக்க வேண்டும் . இதற்கான epass பெற Tnepass என்ற இணைய தள முகவரியில் பள்ளி தலைமையாசிரியர்கள் இணைய தளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் .

4 ) பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களின் விவரங்களையும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் தயாரித்து 20.05.2020 க்குள் சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்து அதன் பிரிண்ட் அவுட்னை 20.05.2020 க்குள் சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலகங்களில் ஒப்படைக்க அனைத்து மெட்ரிக் / சுயநிதி உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களும் தெரிவிக்கப்படுகிறது .

5 ) இதே போன்று ஊராட்சி ஒன்றிய துவக்க / நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களின் விவரங்களையும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் தயாரித்து 20.05.2020 க்குள் சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்க வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது .

6 ) அனைத்து தேர்வு மையங்களிலும் தேர்வு துவங்கும் நேரத்திற்கு முன்னதாக வரும் மாணவர்கள் உட்கார்ந்திருக்கும் வகையில் கூடுதல் வகுப்பறைகள் ( waiting room ) இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும் .

7 ) பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் அவர்கள் பணிபுரியும் மாவட்ட இருப்பிட முகவரியில் உள்ளனரா என்பதனை 18.05.2020 க்குள் பள்ளி தலைமையாசிரியர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும் . அவ்வாறு இல்லாமல் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்தில் இருப்பின் அவர்கள் 19.05.2020 க்குள் அவர்கள் பணிபுரியும் மாவட்ட இருப்பிடத்திற்கு வருகை தர அறிவுறுத்தப்பட வேண்டும் . அனைத்து ஆசிரியர்களும் 20.05.2020 முதல் பள்ளிக்கு வருகை தந்து தேர்வு தொடர்பான பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும் .

8 ) அந்தந்த பள்ளிகளே 10 ம் வகுப்பு தேர்வு மையங்களாக செயல்படும் என்ற விவரத்தினையும் புதிய அட்டவணையின் படி 10 ம் வகுப்பு தேர்வு நடைபெற உள்ள தேதிகள் குறித்த விவரத்தினையும் மாணவர்களின் பெற்றோர் மற்றும் மாணவர்கள் அறியும் வண்ணம் அலுவலக பெயர் பலகையில் ஒட்டி வைக்கப்பட வேண்டும் . மேலும் அனைத்து 10 வகுப்பு மாணவர்கள் பெற்றோர்களுக்கும் இத்தகவல் சார்ந்த வகுப்பாசிரியர்கள் மூலம் கைப்பேசி மூலம் தெரிவிக்கப்பட்டு உறுதி செய்யப்பட வேண்டும் .