சென்னை : பத்தாம் வகுப்பு தேர்வு மற்றும் விடைத்தாள் திருத்த பணிகளை கண்காணிக்க, ஐந்து இணை இயக்குனர்களுக்கு கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா ஊரடங்கால் தள்ளிவைக்கப்பட்ட, ௧௦ம் வகுப்பு பொதுத்தேர்வு, ஜூன், 15ல் துவங்க உள்ளது. இந்த பணிகளை கண்காணிக்க, தமிழகம் முழுவதற்கும், ஐந்து இணை இயக்குனர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மற்றவர்களுக்கு பள்ளி கல்வி துறையின் நிர்வாக பணிகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி, இணை இயக்குனர்கள், நாகராஜ முருகன், ராஜேந்திரன், சுகன்யா, வாசு, கோபிதாஸ் ஆகியோர், 10ம் வகுப்பு தேர்வு பணிகளை கண்காணிக்கும் பணியில், மாவட்ட வாரியாக ஈடுபடுவர். ஒவ்வொரு அதிகாரிக்கும், ஆறு முதல், ஏழு மாவட்டங்களுக்கான தேர்வு பணிகள் வழங்கப்பட்டுள்ளன.விடைத்தாள் திருத்தம் துவங்கும் போது, அந்த பணிகளையும் கண்காணிக்க, இணை இயக்குனர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.