தேர்வு தொடர்பாக, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, உளவியல் ரீதியாக, கவுன்சிலிங் வழங்க, ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கொரோனா பிரச்னையால், தள்ளி வைக்கப்பட்ட, 10ம் வகுப்பு பொது தேர்வு, ஜூன், 1ம் தேதி முதல், 12 வரை நடத்தப்படுகிறது. மாணவர்களுக்கு, அவரவர் வீடுகள் உள்ள பகுதிகளுக்கு நேரடியாக, பஸ் வசதி செய்யப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 10ம் வகுப்பு தேர்வு பயத்தில் உள்ள மாணவர்களுக்கு, உளவியல் ரீதியாக, கவுன்சிலிங் வழங்கி, அவர்களுக்கு நம்பிக்கை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.மாணவர்களுக்கு, 'ஆன்லைன்' வழியிலும், சமூக வலைதளங்கள் மற்றும் தொலைபேசி வழியாகவும், கவுன்சிலிங் அளித்து, தேர்வுக்கு தயார்படுத்துமாறு, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது
தேர்வு தொடர்பான ஆலோசனைகளுக்கு, 14417 என்ற, தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளும்படி, மாணவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர்.
0 Comments
Post a Comment