10ம் வகுப்புத் தேர்வு குறித்த சந்தேகங்களுக்கு குறிப்பிட்ட எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்து விளக்கம் பெறலாம் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

ஊரடங்கு, கொரோனா அச்சத்துக்கிடையே 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், தங்களுக்கு ஏதேனும் குழப்பம், சந்தேகம் இருந்தால் 9266617888 என்ற எண்ணுக்கு Missed Call தரலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Missed Call கொடுக்கும் மாணவர்களுக்கு துறையின் சார்பில் திரும்ப அழைப்பு விடுக்கப்படும் என்றும் அப்போது, ஊரடங்கு மற்றும் கொரோனா அச்சத்தைக் கடந்து எவ்வாறு பொதுத்தேர்வை எழுதுவது என்பது குறித்த ஆடியோ ஒலிபரப்பாகும் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.