10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தற்போது இருக்கும் ஊரிலேயே பொதுத் தேர்வை எழுதிக் கொள்ள மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அனுமதி வழங்கியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மார்ச் 17-ஆம் தேதி தொடங்கிய விடுப்பு தற்போது வரை தொடர்ந்து வருகிறது. இதனிடையே பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று தெரிவித்தார். அதன்படி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.


ஜூன் 15 ஆம் தேதி தொடங்கும் தேர்வு ஜூன் 25 ஆம் தேதி முடிவடைகிறது. இதனால் பள்ளிகள் எப்போது திறக்கப்படும், தேர்வு மையங்கள் எங்கு அமையும் என்பது குறித்து மாணவர்களிடையே குழப்பம் நிலவி வருகிறது. இதனிடையே தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்தும் 10-ஆம் வகுப்புத் தேர்வு மையங்கள் அமைப்பது குறித்தும் முதலமைச்சர் பழனிசாமி, அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் கல்வித்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா ? - 29 ஆம் தேதி ஆலோசனை

இதனிடையே, தனியார்ப் பள்ளிகள் மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்பு எடுக்கக் கூடாது எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கும் பள்ளிகள் மீதும், பொது முடக்கக் காலத்தில் கல்விக் கட்டணத்தை வசூலிக்கும் தனியார்ப் பள்ளிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இந்நிலையில், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள், தற்போது இருக்கும் ஊரிலேயே பொதுத்தேர்வை எழுதிக் கொள்ள மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அனுமதி வழங்கியுள்ளது. சொந்த மாநிலத்தை விட்டுப் பிற மாநிலங்களில் இருக்கும் மாணவர்கள் இருக்கும் ஊரிலேயே தேவை எழுதலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.