சென்னை : பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதுவதற்காக, அவர்கள் தங்கிய விடுதிகளை, வரும், 11ம் தேதி திறக்க, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

இந்நிலையில், சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள பள்ளிகளில் படிக்கும், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள், விடுதிகளில் தங்கியிருந்தனர். ஊரடங்கு காரணமாக, அவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர்.தற்போது தேர்வு எழுத, அவர்கள் மீண்டும் பள்ளிக்கு வர வேண்டும் என்பதால், விடுதிகளை திறக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. வரும், 11ம் தேதி முதல், விடுதிகளில், மாணவர்கள் தங்குவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும். 

தேர்வு முடியும், 25ம் தேதி மற்றும் அதற்கு பின், இரண்டு நாட்கள் வரை, விடுதிகளை திறந்து வைக்க, விடுதி காப்பாளர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.